search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை வண்டி"

    • நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வானங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.

    இந்த நிலையில் துப்புர பணியாளர்கள் குப்பைகளை விரைந்து சேகரிக்க, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த வாகனங்களை நகர மன்ற தலைவர் எம். காவியாவிக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    அப்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, நகர செயலாளர் ம. அன்பழகன், நகராட்சி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ஒடிசா மாநிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் ஆதரவற்ற பெண்ணின் உடல் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள துடிகாதியா பகுதியில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயமக்கமடைந்து சாலையோரம் கிடந்தார். அவரை பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை.

    இதுகுறித்து சோரோ பகுதி மாநராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மூதாட்டியின் உடலுக்கு மாநாகராட்சியே இறுதி சடங்கு செய்தனர். மருத்துவமனையில் இருந்து உடலானது குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்ட பலர் மாநகராட்சியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×